News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News December 27, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், வருகிற 30-ம் தேதி மாலை 5 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சமையல் சிலின்டர்கள் வழங்குவதில் தாமதம் மற்றும் நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
IAS அதிகாரிகளுக்கு வார்னிங்

2026, ஜன.31-க்குள் அசையா சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தவறும் IAS அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. 2017-ல் இருந்து IAS அதிகாரிகளின் சொத்து விவரங்கள் இணையவழியில் பெறப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட கால அவகாசத்தில் சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்யும் IAS அதிகாரிகளுக்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
News December 27, 2025
விஜய் உண்மையான தளபதி, மற்றவர்கள் வெட்டி தளபதி: KAS

2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெல்லும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பேசிய அவர், பல விவகாரங்களுக்கு விஜய் வாய் திறப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர்; ஆனால், நேரம் வரும்போது அவர் பேசுவார் என்று குறிப்பிட்டார். படைக்குத் தலைமை வகிப்பவர், வென்று நாட்டை ஆள்பவரே தளபதி என்று கூறிய அவர், விஜய் தான் உண்மையான தளபதி எனவும், மற்றவர்களெல்லாம் வெட்டி தளபதி என்றும் விமர்சித்தார்.


