News February 22, 2025
இரவு 10 மணிக்கு மேல் இந்தப் படம் பார்க்குறீங்களா?

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க
Similar News
News February 23, 2025
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. இதன்படி சென்னைலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும். இவற்றுக்கு www.tnstc.in, tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படும் நிலையில், சிவத் தலங்களுக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள்.
News February 23, 2025
PAK விட IND அணி சிறப்பாக உள்ளது: அப்ரிடி

இந்திய அணியை ஒப்பிடுகையில் பாகிஸ்தான் சற்று பலவீனமான உள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி கவலை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பலமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் என்று குறிப்பிட்ட அவர், பல போட்டிகளில் இந்திய அணிக்கு அவர்கள் வெற்றியை தேடி தந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். இத்தகைய வீரர்கள் பாகிஸ்தான் அணியிடம் இல்லை என்பது குறையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News February 23, 2025
மொழியை வைத்து பிரிவினை: சீமான்

மொழியை வைத்து மத்திய அரசு மக்களை பிரிக்கப் பார்ப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தி மொழி திணிப்பே மும்மொழிக் கொள்கையின் நோக்கம் எனவும், எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். விளம்பர பலகைகளை கூட ஆங்கிலத்தில் வைத்து தாய் மொழியை அழித்துவிட்டதாகவும், அதையெல்லாம் மீட்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.