News February 22, 2025
இரவு 10 மணிக்கு மேல் இந்தப் படம் பார்க்குறீங்களா?

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க
Similar News
News July 11, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹440 உயர்வு

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 11) சவரனுக்கு ₹440 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹9,075-க்கும், சவரன் ₹72,600-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹160 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹121-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,21,000-க்கும் விற்பனையாகிறது.
News July 11, 2025
கடலூர் கோர விபத்து: மூவர் குழு விசாரணை துவக்கம்

கடலூர் அருகே பள்ளிவாகனம் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி திருச்சியில் விசாரணையை துவக்கியுள்ளது. ரயில் வருவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? ரயில் கடந்த போது ரகசிய குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டதா என பல கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவுசெய்யப்படுகின்றன.
News July 11, 2025
பாக்., பஸ்ஸில் 9 பேரை சுட்டுக் கொன்ற கொடூரம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர், அதில் 9 பேரை மட்டும் சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. So Sad..!