News October 1, 2025

காசாவை நிர்வகிக்கவுள்ளாரா UK முன்னாள் பிரதமர்?

image

டிரம்ப்பின் அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஹமாஸ் தரப்பில் பதில் தரப்படவில்லை. இதனிடையே, டிரம்ப் திட்டப்படி, காசா ஒரு சர்வதேச இடைக்கால அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். இந்நிலையில், காசாவை மறுசீரமைக்கும் பொறுப்பை UK முன்னாள் பிரதமர் பிளேரிடம் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்தால் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டும் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News October 1, 2025

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் PHOTOS

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 7ஆம் நாளான இன்று, சந்திர பிரபா வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதிகளில் பிரம்மாண்டமாக ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு வகையான கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பக்தர்களை மகிழ்வித்தன.

News October 1, 2025

சூர்யாவின் வாடிவாசல் டிராப்?

image

சிம்புவை வைத்து கேங்ஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இப்படம் 2027-லேயே வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக ‘வடசென்னை 2’ படத்தை எடுக்கவுள்ளார். அதேநேரம், வெங்கி அட்லூரி, ஜீத்து மாதவன், பா.ரஞ்சித் ஆகியோரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார் சூர்யா. இதனால் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வாடிவாசல்’ படம் டிராப் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

News October 1, 2025

₹1000 அபராதம் … வந்தது அறிவிப்பு

image

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!