News October 1, 2025

காசாவை நிர்வகிக்கவுள்ளாரா UK முன்னாள் பிரதமர்?

image

டிரம்ப்பின் அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஹமாஸ் தரப்பில் பதில் தரப்படவில்லை. இதனிடையே, டிரம்ப் திட்டப்படி, காசா ஒரு சர்வதேச இடைக்கால அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். இந்நிலையில், காசாவை மறுசீரமைக்கும் பொறுப்பை UK முன்னாள் பிரதமர் பிளேரிடம் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்தால் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டும் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News December 12, 2025

U-19 ஆசியக்கோப்பை: முதல் போட்டியில் IND vs UAE மோதல்

image

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று UAE-ல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள் என மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. துபாயில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா vs UAE மோதுகின்றன. காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. செமிஃபைனல் வரும் 19-ம் தேதியும், ஃபைனல் வரும் 21-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

குடியுரிமையை பரிசோதிக்கும் ECI: திருமாவளவன்

image

SIR-ன் போது ECI கேட்கும் 13 ஆவணங்கள் குடியுரிமையை பரிசோதிக்கும் ஆவணங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி செயல்படக்கூடிய ECI-க்கு, ஒரு வாக்காளரின் குடியுரிமையை சோதிக்க அதிகாரம் இல்லை. எனவே இதை உடனே நிறுத்த வேண்டும். குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்பு சட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 12, 2025

விடுமுறை.. 3 நாள்களுக்கு கூடுதல் பஸ்கள்

image

வார விடுமுறையையொட்டி, மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல, இன்று முதல் டிச.14 வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000 பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை ஈசியாக்குங்க நண்பர்களே!

error: Content is protected !!