News August 18, 2025
யானையும் டிராகனும் ஒன்றிணையுமா?

இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதுபற்றி பேசிய EAM ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான வித்தியாசம், தகராறாக மாறக் கூடாது என்றார். மேலும், நாம் விரும்புவது நியாயமான, பலதுருவ உலக ஒழுங்கை தான் (பலதுருவ ஆசியா உள்பட). உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை கொண்டுவர இது அவசியமாகும் என்றும், இந்த சந்திப்பு பரஸ்பரம் பலன் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
இளைஞர்களுக்கு மாதம் ₹8,000.. விஜய் வாக்குறுதி

இளைஞர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். அதில், *5 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி; இதில், டிகிரி படித்தவர்களுக்கு மாதந்தோறும் ₹10,000, ITI படித்தவர்களுக்கு ₹8,000 சம்பளம். *நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் ₹25 லட்சம் பிணையில்லா கடன். *TNPSC, TRB, TNEB-களில் காலதாமதம் இல்லாமல் போட்டி தேர்வுகள். *தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
பிரிசில்லா பாண்டியன் போட்டி: வியூகம் கைகொடுக்குமா?

அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியில் பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் பொதுத் தொகுதி என்பதால், தனது மனைவியின் சமூக வாக்கை கருத்தில்கொண்டு ஜான் பாண்டியன் இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 29, 2026
அமைச்சருக்கு எதிராக போட்டியிடும் பிரபல நடிகர்

நடிகரும் இயக்குநருமான ஸ்ரீநாத், தூத்துக்குடி தொகுதியின் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவனும், அதிமுக சார்பில் எஸ்.டி. செல்லபாண்டியனும் போட்டியிடும் நிலையில், அவர்களை எதிர்த்து ஸ்ரீநாத் களம் காண்கிறார். விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


