News October 19, 2025
தீபாவளி நாளில் மழை வருமா? வராதா?

அக்.20 தீபாவளியன்று டூர் போகலாம், பட்டாசு வெடிக்கலாம் என பலரும் பல கனவில் உள்ளனர். அவர்களுக்கு வருண பகவான் ஷாக் கொடுத்துள்ளார். அன்றைய தினம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. அதனால், கவனமா இருங்க!
Similar News
News October 19, 2025
டியூட், பைசன் 2 நாளில் இவ்ளோ கோடி வசூலா?

தீபாவளி விருந்தாக வெளியான 3 தமிழ் படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. டியூட் படம் முதல் நாளில் ₹22 கோடி வசூலித்த நிலையில், 2 நாள்களில் ₹45+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘பைசன்’ 2 நாள் முடிவில் ₹12+ கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாணின் டீசல் படம் 2 நாள்களில் ₹2+ கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
News October 19, 2025
படிப்பு செலவுக்கு ₹20 லட்சம் தரும் வங்கி; முற்றிலும் Free!

பள்ளி மாணவர்கள், இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000-₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship வழங்குகிறது SBI. இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம், பள்ளி மாணவர்களுக்கு ₹3 லட்சம், மற்றவர்களுக்கு ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில் பயனடைய <
News October 19, 2025
தீபாவளி.. எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் தெரியுமா?

ஐப்பசி மாத அமாவாசையில் கொண்டாடப்படும் தீபாவளி என்றாலே எண்ணெய் குளியலும், பூஜையும் தான். அப்படி நாளை எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அதிகாலை 4 மணி- 6 மணிக்குள் அல்லது காலை 9.10 மணி முதல் 10.20 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பூஜை செய்ய உகந்த நேரமாக கூறப்படுகிறது.