News October 19, 2025
தீபாவளி.. எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் தெரியுமா?

ஐப்பசி மாத அமாவாசையில் கொண்டாடப்படும் தீபாவளி என்றாலே எண்ணெய் குளியலும், பூஜையும் தான். அப்படி நாளை எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அதிகாலை 4 மணி- 6 மணிக்குள் அல்லது காலை 9.10 மணி முதல் 10.20 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பூஜை செய்ய உகந்த நேரமாக கூறப்படுகிறது.
Similar News
News December 13, 2025
வேட்பாளர் நேர்காணல்.. விஜய் பக்கா பிளான்

தை பொங்கலுக்கு வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனெவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை தயார் செய்து, தொகுதிக்கு 4 பேர் வீதம் தேர்வு செய்து வைத்துள்ளாராம். அதில் 60% மாவட்ட செயலாளர்களுக்கு, பெண்களுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 40% தொகுதிகள் பிரபலங்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.
News December 13, 2025
அதிக சம்பளம் வாங்கிய ஹீரோக்கள்

2025-ம் ஆண்டு அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. இந்தாண்டு, ஒருபடத்துக்கு அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று தெரியுமா? இதுதொடர்பான தகவலை மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 13, 2025
G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய EX நீதிபதிகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக, EX நீதிபதிகள் 56 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், INDIA கூட்டணி பதவிநீக்க நோட்டீஸ் கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சித்தாந்த, அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் முயற்சி. பதவிநீக்க நோட்டீஸை அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்த கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


