News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News July 5, 2025
Fast & Furious பாகங்களில் நடிக்க கூப்பிட்டால் நடிப்பேன்: அஜித்

Fast and Furious, F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைத்தால் நிச்சயமாக நடிப்பேன் என நடிகர் அஜித் தெரிவித்தார். கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அஜித் துபாயில் நடந்த 24H 2025 ரேஸ், இத்தாலியில் நடந்த முகேலா கார் ரேசிலும் பங்கேற்றார். ஆனால் படங்களில் ரேஸ் தொடர்பான சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும், முழு நீள படமாக அவர் நடிக்கவில்லை. அவருக்கு அந்த ஆசை இருப்பதை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
News July 5, 2025
வெந்நீரில் குளித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக California University ஆய்வு கூறுகிறது. ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகமாம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடுமாம். ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாமாம்.
News July 5, 2025
இரவு இங்கெல்லாம் மழை பெய்யும்: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமாம். உங்க ஊர் நிலவரம் எப்படி இருக்கு?