News September 28, 2025
நெரிசலான சாலையை விஜய்க்கு ஒதுக்கியது ஏன்?

விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய விஜய் தரப்பு போலீசிடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால், அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான மற்றும் அணுகுசாலை வசதியற்ற, வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒருவேளை ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய காவல்துறை இடம் ஒதுக்கி இருந்தால் இந்த துயரம் நடந்து இருக்காது என்றும் கூறுகின்றனர்.
Similar News
News January 7, 2026
சாண்ட்னர் தலைமையில் நியூசிலாந்து WC டீம்

அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கும் டி20 உலகக்கோப்பைக்கான அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. சாண்ட்னர் தலைமையிலான அணியில் ஃபின் ஆலன், பிரேஸ்வெல், சாப்மேன், கான்வே, டஃபி, பெர்குசன், ஹென்றி, மில்னே, மிட்செல், நீஷம், பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, சீஃபர்ட், சோதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார். இதனிடையே வரும் 11-ம் தேதி இந்தியா – நியூசிலாந்து இடையேயான ODI தொடர் தொடங்குகிறது.
News January 7, 2026
ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்: அழகிரி

ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்பதால், அதிகாரத்தில் பங்கு கேட்பது நியாயமானது என காங்கிரஸின் KS அழகிரி தெரிவித்துள்ளார். வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகள் அதிக தொகுதி கேட்கின்றனர் என தெரிவித்த அவர், தங்களை பொறுத்தவரை திமுக தோழமை கட்சி என்பதால் பேரம் பேச தேவையில்லை என கூறியுள்ளார். அதேசமயம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறந்த நிலையில், இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் ஹெத்தை திருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


