News April 18, 2024
சிஏஏ குறித்து ராகுல் ஏன் கருத்து சொல்லவில்லை?

குடியுரிமை திருத்த மசோதா குறித்து காங்., எம்.பி. ராகுல் காந்தி ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். பாலக்காட்டில் பிரசாரம் செய்த அவர், “பாரத் ஜோடோ யாத்திரையின் போது தேசிய அரசியல், சர்வதேச அரசியல் பற்றி ராகுல் பேசினார். ஆனால் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடைசிவரை வாய் திறக்கவில்லை” எனக் கூறினார்.
Similar News
News November 11, 2025
நிக்கோலா டெஸ்லா பொன்மொழிகள்

*உள்ளுணர்வு என்பது அறிவை மீறிய ஒன்று. *பெரும்பாலானவர்கள் வெளி உலக சிந்தனையிலேயே மூழ்கியுள்ளனர், அதனால் தங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக மறந்துவிடுகிறார்கள். *தனியாக இருங்கள், அதுவே கண்டுபிடிப்பின் ரகசியம். தனியாக இருங்கள், அப்போதுதான் யோசனைகள் பிறக்கும். *நாம் அனைவரும் ஒன்று. அகங்காரங்கள், நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் மட்டுமே நம்மைப் பிரிக்கின்றன.
News November 11, 2025
வாசிங்டன் சுந்தர் மீது கண் வைத்த CSK.. கறார் காட்டும் GT

அஸ்வினின் ஓய்வு மற்றும் சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவை விட்டுக் கொடுப்பதற்கு மத்தியில், ஸ்பின்னர் + ஃபினிஷர் இல்லாமல் <<18231489>>CSK<<>> திண்டாடி வருகிறது. அந்த வகையில், GT-ன் இளம் ஆல்ரவுண்டரான வாசிங்டன் சுந்தர் மீது CSK கண் வைத்துள்ளது. இது தொடர்பாக, GT-யுடன் பேச்சுவார்த்தை நடந்த, அந்த அணி நிர்வாகம் கறாராக மறுத்துவிட்டதாம். தற்போதைய நிலையில், ஆப்கனின் நூர் அகமது மட்டுமே CSK-ல் உள்ள முன்னணி ஸ்பின்னர்.
News November 11, 2025
₹7,000 கோடி to ₹5,000 கோடி.. இழப்பை குறைக்கும் VI

வோடஃபோன் ஐடியா நிறுவனம், 2-வது காலாண்டின் ஒருங்கிணைந்த நிகர இழப்பை ₹5,524 கோடியாக குறைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹7,176 கோடியாக இருந்தது. அதேபோல், வருவாய் ₹11,194 கோடி (முன்பு ₹10,932 கோடி), ஒரு கஸ்டமரிடம் ஈட்டும் சராசரி வருவாய் ₹188-ஆக (முன்பு ₹166) உயர்ந்துள்ளது. முன்னதாக, வருவாய் இழப்பை சமாளிக்க முடியாமல், இந்நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வதந்தி பரவியது.


