News December 21, 2024
NLC விவகாரத்தில் கோபம் வராதது ஏன்? அன்புமணி

கடலூர் NLC சுரங்க விவகாரத்தில் CM ஸ்டாலினுக்கு கோவம் வராதது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், கடலூரிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், 1956ஆம் ஆண்டிலிருந்து 50,000 ஏக்கர் விவசாய நிலங்களை NLC நிர்வாகம் அழித்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Similar News
News July 5, 2025
புதிய கட்சி தொடங்கிய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி!

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் (TMBSP) என்ற புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார். நீல வண்ணத்திலான கொடியின் நடுவில் யானை இருப்பது போன்ற கொடியை தனது கணவரின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று அறிமுகம் செய்துள்ளார். BSP மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு அக்கட்சியில் பொற்கொடிக்கு முக்கியத்துவம் வழங்காததால் விலகிய நிலையில் தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
News July 5, 2025
₹48,000 சம்பளம்.. 2,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

பேங்க் ஆஃப் பரோடாவில் (BOB) காலியாகவுள்ள 2,500 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 21 – 30. ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் & நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ₹48,480 முதல் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 24. இதுகுறித்து மேலும் அறிய & மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.