News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 12, 2025
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு புதிய பரிசா?

வரும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்களின் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது, அரசின் தொகுப்புடன் பொங்கல் பானைகளையும் வழங்க வேண்டும் என மண் பாண்ட தொழிலாளர்கள் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான சாத்தியக்கூறு மற்றும் நிதிநிலைமை குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 12, 2025
மெழுகு டாலு ரகுல் ப்ரீத் சிங்

மெழுகு பொம்மை போன்ற பிரகாசமும், கண்ணால் பேசும் பார்வையும் கொண்டவர் ரகுல் ப்ரீத் சிங். இவர், மாடலிங் உலகில் தொடங்கி தெலுங்கு, தமிழ் திரைப்படங்களின் வழியே தற்போது பாலிவுட்டில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு, லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 12, 2025
லோன் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

‘லோன் வேணுமா?’ என்று வரும் பல ஆபர்கள் மோசடிகள் தான். இவற்றில் சிக்காமல் தவிர்க்க: *உங்கள் நிதித் தகுதியைவிட மிகப் பெரிய தொகை, மிகக் குறைவான வட்டி -நம்பவே நம்பாதீங்க. *முன்தொகை கேட்டால் கொடுக்காதீர் *RBI-யில் பதிவு செய்யப்படாத வங்கி, நிதி நிறுவனங்களை தவிர்க்கவும் *பர்சனல் டேட்டா, சந்தேகமான ஆப் ஆக்சஸ் கேட்டால் கொடுக்க வேண்டாம் *இன்றைக்கே கடைசி, இல்லன்னா லோன் கிடைக்காது என்றால், ஏமாந்து விடாதீர்.


