News October 12, 2025
புது இடத்துக்கு மாறினால் தூக்கம் வராதது ஏன்?

சிலருக்கு இடம் மாறி படுத்தால் தூக்கம் வராது. இதனை First Night Effect என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது, முன் பின் தெரியாத ஒரு இடத்தில் நாம் தூங்கும்போது, நமது இடது பக்க மூளை ஆக்டிவாகவே இருக்கிறதாம். ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என மூளை நினைப்பதால்தான் புது இடத்தில் பலரால் நிம்மதியாக தூங்கமுடிவதில்லை. தொடர்ந்து அந்த இடத்தில் தூங்கினால் மட்டுமே இது சரியாகும் என்கின்றனர். நீங்களும் இப்படிதானா?
Similar News
News October 12, 2025
நாளை முதல் பள்ளிகளில் தீபாவளி விழிப்புணர்வு

தீபாவளியையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். நாளை முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. SHARE IT
News October 12, 2025
வரலாற்று கதையில் தனுஷ்

தனுஷுடனான படத்தை முடித்த பிறகே இன்பநிதியை, மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதை மாரி உறுதி செய்துள்ளார். தனுஷை வைத்து இயக்கும் இப்படம் வரலாற்று ரீதியான படமாக இருக்கும் எனவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்றும் கூறியுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளுக்காக தனுஷிடம் அனுமதி கேட்டு, சிறந்த முறையில் எழுதி வருவதாகவும் மாரி அப்டேட் கொடுத்துள்ளார். கர்ணன் காம்போ கலக்குமா?
News October 12, 2025
மழைக்காலத்தில் சாப்பிட ‘ருசியான ஸ்நாக்ஸ்’

கையில் டீ, மழைத் துளிகளின் ஓசை, மெல்லிய இசை, மனதுக்கு அமைதியை கொடுக்கும் மண்வாசனை என மழைக்காலத்தின் மாலை வேளைக்கு இணை எதுவும் இல்லை. அழகான மாலை வேளைக்கு, மேலும் அழகை கொடுப்பது நம் கையில் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் தான். மழைக்காலத்தில் என்னென்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மேலே உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்தது எது என்று கமெண்ட் செய்யுங்கள்.