News August 17, 2025

யாருடன் கூட்டணி… முடிவை எடுத்த ராமதாஸ்

image

2026 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற ராமதாஸ் மிகப்பெரிய திட்டத்தை வைத்துள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவிட்டது. கூட்டணி குறித்த முடிவையும், வேட்பாளர்கள் யார் யார் என்பதையும் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் கூறினார். அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைய விரும்பும் நிலையில், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணியில் இணைய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News March 27, 2026

இரவில் லேட்டா தூங்கினால் இவ்வளவு ஆபத்தா?

image

இரவில் அதிக அளவிலான செயற்கை வெளிச்சத்தில் (மின்சார விளக்குகள்) இருப்பது, இதய நோய் ஆபத்தை அதிகரிக்கலாம் என அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட நேரம் செயற்கை வெளிச்சத்தில் இருப்பது மூளையை அழுத்தத்துக்கு உட்படுத்தி, ரத்தக்குழாய்களை பாதித்து இதய நோய்க்கு வழிவகுக்கிறது. இரவில் அதிக நேரம் விழுத்திருப்பதால் 5 ஆண்டுகளில் 35%, 10 ஆண்டுகளில் 22% வரை இதயநோய் ஆபத்து அதிகரிக்கிறதாம்.

News March 27, 2026

ராசி பலன்கள் (27.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 27, 2026

IPL தொடக்கப் போட்டி.. கொண்டாட்டங்களுக்கு NO

image

IPL தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் கொண்டாட்டங்கள் இன்றி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், உயிரிழந்த 11 பேரின் நினைவாக இம்முறை தொடக்க விழா தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இறுதிப்போட்டியின் போது பிரமாண்டமான நிறைவு விழாவை நடத்த IPL நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!