News November 22, 2024
ஜார்க்கண்டில் முடிசூடப் போவது யார்?

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. INDIA vs BJP கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை BJP-க்கு ஆதரவாக இருந்தாலும், INDIA கூட்டணி டஃப் ஃபைட் கொடுக்கும் என்றே கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
Similar News
News July 6, 2025
மராட்டிய எழுச்சி.. பாஜக மீது ஸ்டாலின் காட்டம்

TN புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவோம் என கூறிய பாஜக, தங்கள் ஆட்சியிலுள்ள மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சியை கண்டு பின்வாங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த பேரணி எழுச்சி மிகுந்தது என கூறியுள்ளார். உ.பி., ராஜஸ்தானில் 3வது மொழி என்ன? என்ற ராஜ்தாக்கரே கேள்விக்கு பாஜகவிடம் பதில் இருக்காது எனவும் விமர்சித்துள்ளார்.
News July 6, 2025
வரலாற்றில் இன்று

1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது. 1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.
News July 6, 2025
மீண்டும் இணைந்த தாக்கரே பிரதர்ஸ்.. MH-ல் புதிய வரலாறு!

2006-ல் சிவசேனாவில் இருந்து விலகி MHS-யை தொடங்கிய ராஜ் தாக்கரே மீண்டும் உத்தவ் தாக்கரே(UBT) உடன் இணைந்துள்ளார். மராட்டியத்தில் இந்தி மொழி திணிப்புக்கு ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற முழக்கத்தோடு கைகோர்த்திருக்கும் இருவரும் மும்பை மாநகராட்சிக்கு விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் சேர்ந்து களம் காண உள்ளனராம். இது, அங்கு ஆளும் பாஜக அரசுக்கு சற்று அதிர்ச்சியும், சிவசேனாவினருக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.