News October 20, 2025

தீபாவளிக்கு உண்மையில் யாரை வழிபடணும்?

image

தீபாவளிக்கு பலகாரங்கள் சுட்டு, சாமியை வணங்கி பூஜை போட்டுவிடுகிறோம். ஆனால் உண்மையில் தீபாவளியன்று முன்னோர்களைதான் வணங்க வேண்டும் என புராணங்கள் சொல்கின்றன. தீபாவளிக்கு முன்னோர்களை அழைத்து, விருந்தளித்து, சாந்தப்படுத்த வேண்டும். கார்த்திகை தீபத்தன்று பட்டாசு வெடித்து அவர்களை வழியனுப்பணும். இப்பழக்கம் ஒரு காலத்தில் இருந்துள்ளதாம். ஆனால், தற்போது சிலர் மட்டுமே இதை கடைபிடிக்கின்றனர்.

Similar News

News October 20, 2025

நடிகை பிரியங்கா மோகன் கர்ப்பமா? CLARITY

image

நடிகை பிரியங்கா மோகன், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோஸை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதுவரை அவர் திருமணம் செய்யாத நிலையில், இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், பவன் கல்யாணுடன் அவர் நடித்த ‘OG’ படத்தின் போட்டோஸை அவர் பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் அவரது பதிவுக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

News October 20, 2025

7000 கி.மீ அப்பால்.. களைகட்டிய தீபாவளி!

image

இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் 25-வது ஆண்டு தீபாவளி விழா களைகட்டியுள்ளது. இந்தியர்களுடன் சேர்ந்து உள்ளூர் வாசிகளும் இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் பல்வேறு வடிவிலான உருவங்களுடன் மக்கள் வலம் வந்தனர். இந்தியாவிலிருந்து 7000 கி.மீ அப்பால் நடைபெற்ற இந்த விழாவின் போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

News October 20, 2025

உலகளவில் முடங்கிய Amazon, Snapchat, Canva, OpenAI

image

அமேசான் வெப் சர்வீஸின் செயலிழப்பு காரணமாக, Snapchat, Canva, OpenAI, Perplexity உள்ளிட்ட செயலிகள் உலகளவில் முடங்கியுள்ளன. AWS சேவைகளில் Error rates அதிகரித்துள்ளதால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக AWS தெரிவித்துள்ளது. Amazon, Prime Video, Spotify, Zoom மற்றும் Reddit உள்ளிட்ட சேவைகளும் செயலிழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவதியடைந்துள்ளனர்.

error: Content is protected !!