News October 20, 2025

தீபாவளிக்கு உண்மையில் யாரை வழிபடணும்?

image

தீபாவளிக்கு பலகாரங்கள் சுட்டு, சாமியை வணங்கி பூஜை போட்டுவிடுகிறோம். ஆனால் உண்மையில் தீபாவளியன்று முன்னோர்களைதான் வணங்க வேண்டும் என புராணங்கள் சொல்கின்றன. தீபாவளிக்கு முன்னோர்களை அழைத்து, விருந்தளித்து, சாந்தப்படுத்த வேண்டும். கார்த்திகை தீபத்தன்று பட்டாசு வெடித்து அவர்களை வழியனுப்பணும். இப்பழக்கம் ஒரு காலத்தில் இருந்துள்ளதாம். ஆனால், தற்போது சிலர் மட்டுமே இதை கடைபிடிக்கின்றனர்.

Similar News

News December 12, 2025

தாயின் சாதி அடிப்படையில் சாதி சான்றிதழ்: SC

image

இந்தியாவில் தந்தையின் சாதியை பொறுத்தே குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிறுமியின் எதிர்காலத்தை பாதுகாக்கும் விதமாக தாயின் சாதி அடிப்படையில் சான்றிதழ் வழங்க SC உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதி கூறினாலும், எதிர்காலத்தில் விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 12, 2025

ரஜினிக்கு பிறந்தநாள்: கமல், EPS வாழ்த்து!

image

75 ஆண்டுகால தனிச்சிறப்பான வாழ்வும், 50 ஆண்டுகால லெஜண்டரி சினிமா கரீயரும் கொண்ட நண்பரே, ஹேப்பி பர்த்டே என கமல் ரஜினியை வாழ்த்தியுள்ளார். அதேபோல, அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என EPS வாழ்த்தியுள்ளார். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 12, 2025

BREAKING: செங்கோட்டையன் உறுதி செய்தார்

image

ஈரோடு, விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் வரும் 18-ம் தேதி விஜய்யின் பரப்புரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பரப்புரை நடைபெறவுள்ள இடம் <<18537715>>HRCE-ன் கீழ் உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது<<>> என கலெக்டர், SP-க்கு அத்துறையின் அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!