News August 19, 2025
யார் இந்த சுதர்சன் ரெட்டி?

INDIA கூட்டணியால் து.ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 79 வயதான சுதர்ஷன் ரெட்டி தெலங்கானாவின் ரங்காரெட்டியை சேர்ந்தவர். ▶1946-ல் பிறந்த இவர், 2007-2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார். ▶1971-ல் உஸ்மானியா பல்கலையில் பயின்று, சட்ட ஆலோசகர் ▶1995-ல் ஆந்திர HC-ன் நிரந்தர நீதிபதியாகவும், 2005-ல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார்.
Similar News
News March 5, 2026
EPS இதனால்தான் பதற்றத்தில் இருக்கிறார்: மாணிக்கம் தாகூர்

நிதிஷ்குமார் நிலைமை மூலம் NDA-ல் உள்ள கூட்டணிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். பிஹார் CM பதவியில் இருந்து <<19302375>>நிதிஷ்குமார்<<>> விலகியது பற்றி குறிப்பிட்ட அவர், பாஜக கூட்டணிகளில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல, அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். அதனால்தான், EPS போன்ற தலைவர்கள் சிறிது பதற்றமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
News March 5, 2026
போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டது: ராகுல்

இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல் வீழ்த்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டதாக கூறிய அவர், PM மோடி இதைபற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என விமர்சித்துள்ளார். மேலும், இதுபோன்ற ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை எனவும், ஆனால் USA-விடம் நாட்டையே விட்டுக்கொடுத்த ஒரு பிரதமரை இந்தியா தற்போது கொண்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.
News March 5, 2026
விஜய் கூட்டணியில் பெரிய கட்சி.. சற்றுநேரத்தில் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணியும், திமுக கூட்டணியில் இணைய திருமாவும் முட்டுக்கட்டை போட்டதால், ராமதாஸ் இதுவரை கூட்டணியை அறிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், தைலாபுரம் இல்லத்தில் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி செல்ல ராமதாஸ் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


