News April 5, 2024

நீட் மாணவர்கள் தற்கொலைக்கு பொறுப்பேற்பது யார்?

image

காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு கட்டாயமில்லை. மாநிலங்கள் விரும்பினால் தேர்வை நடத்தி கொள்ளலாமென அறிவித்துள்ளது. இதற்கு, நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? என கேள்வி எழுப்பியுள்ள சீமான், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவோம் எனப் பேசுவதே முட்டாள் தனம் என விமர்சித்துள்ளார்.

Similar News

News March 31, 2026

FLASH: அதிமுகவில் இணைந்த திமுக முக்கிய தலைவர்

image

OPS வருகைக்கு பிறகு தேனி மாவட்ட திமுகவில் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு, பூத் பணிகளில் பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்தும் குறைந்துள்ளதாம். இதனால் அதிருப்தியடைந்த, ஒருங்கிணைந்த EX தேனி மாவட்ட செயலாளரும், திமுக தீர்மானக் குழு இணைச் செயலருமான ஜெயக்குமார் உள்ளிட்ட 50 நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இந்த விவகாரம் திமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

News March 31, 2026

ஜெயலலிதாவின் ஹைதராபாத் இல்லம் முடக்கம்

image

₹80 லட்சம் வரி பாக்கி புகாரில் ஜெ.,வின் ஹைதராபாத் இல்லத்தை மாநகராட்சி நிர்வாகம் முடக்கியுள்ளது. ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் 4 மாடிகளுடன் உள்ள இல்லத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சொத்து வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜெ.,வின் உறவினர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதமே நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, அந்த இல்லத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

News March 31, 2026

ஒரே தொகுதியில் சசிகலா, ராமதாஸ் தரப்பு போட்டி

image

சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலா – ராமதாஸ் கூட்டணி அமைத்த நிலையில், இருவரும் மயிலாடுதுறை தொகுதிக்கு தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். கூட்டணி அறிவிப்புக்கு பிறகு இருதரப்பும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இந்த சூழலில் ஒரே தொகுதியில் இருதரப்பும் போட்டியிடுவதால், சசிகலா – ராமதாஸ் கூட்டணி தொடருகிறதா அல்லது முறிந்துவிட்டதா? என்று கேள்வி எழுந்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!