News October 7, 2025
தங்கத்தின் விலையை தீர்மானிப்பவர்கள் யார்?

தினம் தங்கம் விலை ஏறும்போது, ‘யாருடா இப்படி விலையை ஏத்தறது?’ என்று யோசிச்சிருக்கீங்களா? London Bullion Market சங்கம் தான் அதற்கு காரணம். அது நிர்ணயிக்கும் விலையில்தான் நாடுகளும் நிறுவனங்களும் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்கின்றன. இந்தியாவில், இறக்குமதி வரிக்கேற்ப உள்நாட்டில் விலையை India bullion & jewellers association தீர்மானிக்கிறது. தேவை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் விலை முடிவாகும்.
Similar News
News October 7, 2025
மேனேஜர் போன் பண்ணி தொல்லை கொடுக்கிறாரா?

எக்ஸ்ட்ரா நேரம் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும், ஆபிஸில் இருந்து உங்களுக்கு போன் வருவதுண்டா? இந்த தொல்லைக்கு முடிவு கட்ட, ‘Right to disconnect’ உரிமை கோரும் ஒரு தீர்மானத்தை கேரள MLA ஜெயராஜ், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். வீட்டிற்கு சென்றபின், ஊழியர்களுக்கு போன், இமெயில், மெசேஜ், மீட்டிங் என எந்த ஒரு தொல்லையும் தரக்கூடாது என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி உங்க கருத்து?
News October 7, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடி கைது

கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் துயர சம்பவ வழக்கில் விஜய் குறித்து ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும் திமுக அரசை சாடியும் இருந்தார். இந்நிலையில், அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
News October 7, 2025
தமிழகத்தை சுனாமி தாக்கப் போகிறதா? CLARITY

ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் டூம்ஸ்டே மீன்கள், கடலின் மேற்பரப்புக்கு வந்தால், அது பேரழிவின் அறிகுறி என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் மீனவர்களின் வலையில் இவ்வகை மீன்கள் சிக்கியுள்ளன. 2 மாதங்களுக்கு முன்பும், இவை காணப்பட்டன. இதனால், வங்கக் கடலில் சுனாமி வரப்போகிறதா என அச்சம் எழுந்தது. இந்நிலையில், இதற்கு அறிவியல் ஆதாரமில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.