News October 7, 2025
தங்கத்தின் விலையை தீர்மானிப்பவர்கள் யார்?

தினம் தங்கம் விலை ஏறும்போது, ‘யாருடா இப்படி விலையை ஏத்தறது?’ என்று யோசிச்சிருக்கீங்களா? London Bullion Market சங்கம் தான் அதற்கு காரணம். அது நிர்ணயிக்கும் விலையில்தான் நாடுகளும் நிறுவனங்களும் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்கின்றன. இந்தியாவில், இறக்குமதி வரிக்கேற்ப உள்நாட்டில் விலையை India bullion & jewellers association தீர்மானிக்கிறது. தேவை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் விலை முடிவாகும்.
Similar News
News November 17, 2025
BREAKING: அமைச்சர் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதி

கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேலூரில் உள்ள சிஎம்சி ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நலக் குறைவுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இன்று மாலை கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
ராசி பலன்கள் (17.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 17, 2025
ஹாஸ்பிடலில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்

இந்திய அணியின் கேப்டன் கில் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸின்போது அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டது. இந்நிலையில் கில்லுக்கு கழுத்து வலி குறைந்திருந்தாலும், அவர் 4-5 நாள்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, அவர் கவுஹாத்தியில் நவ.22-ல் நடைபெறவுள்ள 2-வது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


