News April 3, 2025
எந்த நாட்டுக்கு அதிக வரி விதிப்பு?

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பில் எந்த நாட்டிற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? கம்போடியாவுக்கு. மிக அதிகமாக 49% வரி விதிக்கப்பட்டுள்ளது. லாவோஸ் 48%, மடகாஸ்கர் 47%, வியட்நாம் 46%, இலங்கை, மியான்மர் நாடுகளுக்கு முறையே தலா 44% வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியா, சிலி, கொலம்பியா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
லஞ்சம் கேட்குறாங்களா? இந்த நம்பருக்கு உடனே அடிங்க

அரசு சேவையை பெற அரசு அலுவலகங்களை நாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா? லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீங்கள் புகாரளிக்கலாம். உடனடியாக 1064 / 1965 -க்கு அழைத்தோ அல்லது dvac@nic.in-க்கு மெயில் மூலமாகவோ புகாரளியுங்கள். புகாரளித்தவரின் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான இன்று (டிச.9), லஞ்சத்துக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுக்க அனைவரும் முன்வருவோம். SHARE.
News December 9, 2025
கடன்கள் தள்ளுபடி… அரசு வெளியிட்ட அறிவிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ₹6.15 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என பார்லிமென்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலம் வரை வசூலிக்க முடியாமல் போகும் கடன்கள் வங்கி பதிவுகளில் இருந்து நீக்கப்படும். இதற்கு, லோன் காசை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது அர்த்தமல்ல. வங்கிகள் தொடர்ந்து இக்கடன்களை திரும்பப் பெற முயற்சிகள் எடுக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
IPL 2026 ஏலத்துக்கு வரப்போகும் வீரர்கள் இவர்களே

2026 IPL ஏலத்திற்கான வீரர்களின் இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 77 இடங்களுக்கு, 240 இந்திய வீரர்கள், 110 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். கான்வே, சர்ஃபராஸ் கான், மில்லர், பிரித்வி ஷா, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரச்சின், டீ காக், தீக்ஷனா உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கான ஏலம், டிச.16-ம் தேதி அபுதாபியில் நடக்கவிருக்கிறது.


