News March 21, 2024

பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?

image

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து தகவல் கசிந்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தருமபுரி, சேலம், கடலூர், ஆரணி, அரக்கோணம், திருப்பெரும்புதூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Similar News

News February 16, 2026

வாய் துர்நாற்ற பிரச்னையா? அப்போ இதை யூஸ் பண்ணுங்க..

image

சங்கடத்தை தரும் வாய் துர்நாற்றத்தை குறைந்த இந்த பொருள்கள் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர். *இஞ்சி: இஞ்சியில் இருக்கும் ஜிஞ்செரோல் உமிழ்நீர், குடல் இயக்கத்தை அதிகரிக்குமாம். *புதினா இலைகள்: இதில் உள்ள மெந்தால், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் குடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை நீக்குமாம். *சோம்பு, கிராம்பு: இதுவும் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.

News February 16, 2026

நம்பிக்கையில்லா தீர்மானம்… மார்ச் 9-ம் தேதி ஓட்டெடுப்பு

image

லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்நிலையில் இதற்கான ஓட்டெடுப்பு வரும் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி,118 MP-க்கள் கையெழுத்திட்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

News February 16, 2026

சுஜாதா பொன்மொழிகள்

image

*நேரம் ஒரு நதி போன்றது. நீங்கள் ஒரே நீரை இருமுறை தொட முடியாது. *அறிவு என்பது தெரிந்தவற்றை அடுக்கி வைப்பது அல்ல, தெரியாதவற்றைத் தேடிச் செல்வது. *பெண்களின் மெளனம் பல சமயம் சம்மதம் அல்ல, அது ஒரு பெரிய போராட்டத்தின் முடிவு. *நவீன உலகம் என்பது வசதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, சிக்கல்களின் தொகுப்பும்தான். *வாசிப்பு என்பது மூளைக்குச் செய்யும் உடற்பயிற்சி.

error: Content is protected !!