News March 21, 2024
பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து தகவல் கசிந்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தருமபுரி, சேலம், கடலூர், ஆரணி, அரக்கோணம், திருப்பெரும்புதூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Similar News
News January 25, 2026
ஆட்சியில் பங்கு: ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன ராகுல்

ஆட்சியில் பங்கு தர வேண்டும் எனப் பேசி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சர்ச்சையில் மையப்புள்ளியாக இருந்தவர் மாணிக்கம் தாகூர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் MP கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது கருத்துகளை ராகுலிடம் தெளிவாக விளக்கிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.
News January 25, 2026
WhatsApp-ல் வரும் புது வசதிகள்!

WhatsApp-ல் இனி பெற்றோர்கள், ‘Secondary Accounts’ வசதி மூலம் தங்களது குழந்தைகளுக்கு தனி அக்கவுண்ட்கள் உருவாக்கலாம். இந்த அக்கவுண்ட்களுக்கு தனி Status கிடையாது. அதேபோல, Contacts-ல் இல்லாதவர்களுடன் Chat பண்ண முடியாது. மெசேஜ் வசதியை குழந்தைகளுக்கு பெற்றாலும், அறிமுகமில்லாதவர்களுடன் பேசுவது, தவறான மெசேஜ்கள் வருவது போன்ற அபாயங்களைத் தவிர்க்கவும் இந்த Parenting Control அளிக்கப்படுகிறது.
News January 25, 2026
திமுகவில் இணைய டிமாண்ட் வைத்தாரா OPS?

நேற்று <<18942850>>OPS-ஐ அமைச்சர் சேகர் பாபு <<>>சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திமுகவில் இணைவதற்கு சில கோரிக்கைகளை OPS வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜன், MLA அய்யப்பனுக்கு தேர்தலில் போட்டியிட 2 சீட்டும், மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட்டும் தருமாறு கோரினாராம். OPS இணைந்தால் தென்மாவட்டங்களில் கூட்டணி பலப்படும் என கருதி திமுகவும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாம்.


