News September 14, 2024
முதல் ODI கிரிக்கெட் மேட்ச் எங்கு நடந்தது?

மெல்போர்னில் 5 ஜனவரி 1971 அன்று AUS – ENG இடையே நடந்த ஆட்டமே உலகின் முதல் ODI ஃபார்மெட் போட்டியாக கருதப்படுகிறது. வானிலை காரணமாக 3ஆவது டெஸ்ட் நடத்த முடியாமல் போனது. இதனால் போட்டியை கைவிட முடிவு செய்த இருதரப்பும், கூட்டத்தை திருப்திப்படுத்தவும், நிதி இழப்பை சரி செய்யவும் அதற்கு பதிலாக, 40 ஓவர் கொண்ட (White Kit, Red Ball) ஒரு நாள் ஆட்டத்தை விளையாடினர். இதில் AUS 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
Similar News
News August 18, 2025
BREAKING: கவர்னர் ஆகிறார் எச்.ராஜா

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவின் கழுகு பார்வை தமிழகத்தை நோக்கியே இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், எச்.ராஜா கவர்னராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு, மகாராஷ்டிரா (CPR-க்கு பதில்) அல்லது நாகலாந்து (இல.கணேசனுக்கு பதில்) கவர்னராக எச்.ராஜா நியக்கப்படலாம் என தெரிகிறது.
News August 18, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17440679>>இங்கே <<>>கிளிக் செய்யவும்
1. நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்.
2. அகநானூறு.
3. 1945.
4. சங்கராபரணம்.
5. நிலா.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 18, 2025
பிள்ளை சரியா படிக்கலையா? இதை பண்ணுங்க

உங்க பிள்ளை சரியா படிக்கலன்னு நினைச்சு வருத்தமா? பள்ளி நேரம் போதாதுன்னு அவங்கள டியூஷன்லயும் சேர்த்துவிட்டிருப்பீங்களே? டியூஷனை நிறுத்திட்டு அவங்கள மியூசிக் கிளாஸ்ல சேர்த்துவிடுங்க. காரணம், இசை பயிற்சி ஒரு குழந்தையோட Dopamine ஹார்மோனை அதிகரிக்குமாம். இதனால Critical thinking, எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை அதிகரிக்கிறதோடு, அறிவு திறன் மேம்படும்னு Stanford பல்கலை., ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.