News November 18, 2024
முதியோர் எண்ணிக்கை அதிகமானால் என்ன ஆகும்?
தமிழகத்தில் சராசரி வயது உயரும் நிலையில், அதற்கேற்ப முதலீடுகள் இல்லையெனில், முன்னேறிய மாநிலமாக இல்லாமல், முதியோர் மாநிலமாக மாறும் என CM ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மக்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்தால்: *நாட்டின் மனித வளமும், உற்பத்தித் திறனும் குறையும் *வெளியாள்களை பணியமர்த்த நேரிடும் *மருத்துவ & பராமரிப்பு செலவு, அரசின் சமூக பாதுகாப்பு செலவு அதிகரிக்கும் * சார்ந்திருக்கும் மக்கள் தொகை உயரும்.
Similar News
News November 20, 2024
அடுத்தடுத்து டைவர்ஸ்… எங்கே செல்கிறது சினிமாத்துறை!
கலாசாரத்தை சீர்கெடுப்பதில் சினிமாவுக்கு முக்கிய பங்கிருப்பதாக மக்கள் மத்தியில் பொதுவான கருத்து உண்டு. அதனை உறுதி செய்யும் வகையில், அத்துறையில் அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது, சினிமாத்துறை மீதான ஒவ்வாமையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வாழ்வில் ஒன்றாக இருப்போம் என்று உறுதிமொழியேற்று இணையும் தம்பதியரால் ஒற்றுமையாக இருக்கவே முடியாதா?
News November 20, 2024
விளையாட்டு துளிகள்
➤புரோ கபடி தொடர்: 64வது லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 54-31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. ➤ஹாக்கி ஆசிய சாம்பியன்: இன்று நடைபெறும் ஃபைனலில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. ➤ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீராங்கனை விஸ்மாயாவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ➤சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் INDவின் அனுபமா USAவின் பீவெனை வீழ்த்தினார்.
News November 20, 2024
4 மாவட்டங்களில் விடுமுறை
கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் தற்போது வரை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லையை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என விருதுநகர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்