News April 23, 2025
தீவிரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம்: ராஜ்நாத்

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார். இக்கொடுந்தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனவும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்துக் கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதல்களால் இந்தியாவை மிரட்ட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 23, 2025
BREAKING: இபிஎஸ் விருந்தில் 4 MLAக்கள் ஆப்சென்ட்

பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் MLA-க்களை சமாதானப்படுத்த சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இபிஎஸ் விருந்து வைத்து வருகிறார். இவ்விருந்தில் அதிமுக மூத்த தலைவர்கள் பங்கேற்ற நிலையில் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அவரை தொடர்ந்து சூலூர் MLA கந்தசாமி, பவானிசாகர் MLA பண்ணாரி, திண்டிவனம் MLA அர்ஜுனனும் புறக்கணித்துள்ளனர். இது அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது.
News April 23, 2025
EPS-ன் விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

ADMK MLA-க்கள் அனைவருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் EPS, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விருந்து அளிக்கிறார். பாஜகவுடன் கூட்டணியமைத்திருப்பதால், தலைமை மீது MLAக்களுக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்ய இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், செங்கோட்டையன் இந்த விருந்துக்கு வரவில்லை. இது, EPS vs செங்கோட்டையன் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
News April 23, 2025
ஜாமின் கொடுத்ததே தவறு: ஒப்புக்கொண்ட நீதிபதிகள்

உங்களுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம்; அதனை நாங்கள் இப்போது ஒப்புக் கொள்கிறோம் என்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் பதவியில் தொடர்வதா (அ) ஜாமினா என்று முடிவெடுக்க, அவருக்கு 4 நாள்கள் கெடு விதித்துள்ளனர். ஜாமின் இல்லையெனில், சிறை செல்ல நேரிடும். என்ன முடிவெடுப்பார் செந்தில் பாலாஜி?