News May 15, 2024
டி20 உலகக் கோப்பையை இலவசமாகப் பாருங்கள்!

டி20 உலகக் கோப்பைத் தொடரை இலவசமாக ஒளிபரப்பவுள்ளதாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனின் படத்துடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைலில் ஒவ்வொரு போட்டியின், ஒவ்வொரு பந்தையும் இலவசமாகப் பார்க்கலாம்’ என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, 50 ஒவர் உலகக் கோப்பையை ஹாட்ஸ்டார் இலவசமாக ஒளிபரப்பியது.
Similar News
News April 14, 2026
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறீர்களா?

வேலை காரணமாகவோ, நீண்ட பயணத்தின் போதோ சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் எவ்வளவு பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா? *தொடர்ந்து நீங்கள் இதுமாதிரி செய்யும்போது, நாளடைவில் அழுத்தம் காரணமாக சிறுநீர்ப்பை தசைகளும், இடுப்பு தசைகளும் வலுவிழக்கும். *சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். *சிறுநீரகம் செயலிழக்கலாம். *கற்கள் உண்டாகும். ஆகவே, இனிமேல் அடக்கி வைக்காதீங்க, தவிர்க்க முயற்சியுங்கள். SHARE IT
News April 14, 2026
தமிழக தேர்தல்… தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஏப்.16) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெறும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கட்சி பிரதிநிதிகளின் முன்பு தேர்தல் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொள்வார்கள்.
News April 14, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

ஏப்.16 உடன் 1-9 வகுப்புகளுக்கு தேர்வு முடிவடைகிறது. இதனிடையே, நாளை தேர்வு கிடையாது என்பதால், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் பணியில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும், அவர்கள் நாளை வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இன்றும் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர்.


