News September 30, 2025
அதிமுக ஆட்சியில் EPS Eye மூடியிருந்ததா? அன்பில் மகேஸ்

கரூர் சம்பவத்திற்கு அமைக்கப்பட்ட ஆணையத்தை Eyewash என <<17867314>>EPS விமர்சித்த<<>> நிலையில், அதற்கு அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க இதே Rtd நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்த போது, EPS Eye மூடியிருந்ததா என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா சிறை சென்ற போது, OPS தலைமையில் கண்ணீரோடு பதவியேற்ற உத்தமரா இன்று அழுகையை பற்றிப் பேசுவது எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
BREAKING: வங்கிக் கணக்கில் நாளை ₹2,000 வருகிறது

PM கிசான் திட்டத்தின் 22-வது தவணை நாளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹18,640 கோடி நேரடியாக செலுத்தப்படவுள்ளது. அதனால், இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-24300606 எண்ணை அழைத்து ஆலோசனை பெறுங்கள்.
News March 12, 2026
TN-ல் தொடர்கதையாகும் வன்கொடுமை: கிருஷ்ணசாமி

தூத்துக்குடியில் கழிப்பறை வசதி இல்லாததால் வயல்வெளிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ளார். இதுபற்றி புகாரளிக்க சென்ற பெற்றோரை போலீஸ் அவமதித்ததாக கூறிய அவர், விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் மாணவியை காப்பாற்றியிருக்கலாம் என்றார். மேலும், TN-ல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகவும் சாடியுள்ளார்.
News March 12, 2026
போரின் தாக்கம்.. சிமென்ட் விலை உயர வாய்ப்பு!

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் இந்தியாவில் சிமென்ட் துறையையும் பாதித்துள்ளதாக ‘எலாரா கேபிடல்’ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 15 நாள்களில், கச்சா எண்ணெய் விலை 39%, நிலக்கரி 14% அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. சிமென்ட் தயாரிப்புக்கான எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், இதனை ஈடுசெய்ய சிமென்ட் மூட்டை சுமார் ₹6 வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.


