News April 7, 2024

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நடைபயிற்சி

image

ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உடலில் வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். குளிர் காலங்களில் கருப்பு உடை அணிவதால் தவறில்லை. நடைபயிற்சியை விட சிறந்த பயிற்சி உடலுக்கு வேறு எதுவும் இல்லை.

Similar News

News January 16, 2026

மயிலாடுதுறை: தீராத நோயையும் தீர்க்கும் கோயில்!

image

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள சிவலோநாநதரை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள், தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க..

News January 16, 2026

திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா?

image

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14 – 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

News January 16, 2026

தாக்கரே சகோதரர்களுக்கு ‘ரசமலாய்’ அனுப்பிய பாஜக

image

மும்பை மாநகராட்சி தேர்தலில் <<18872687>>’மஹாயுதி’<<>> கூட்டணி 120-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பாஜக தலைவர் தஜிந்தர் பக்கா, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேவுக்கு ஆன்லைனில் ‘ரசமலாய்’ ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார். அண்ணாமலையை <<18833309>>ரசமலாய்<<>> என ராஜ் தாக்கரே விமர்சித்திருந்த நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக ‘இந்த இனிப்பை நீங்கள் ரசிப்பீர்கள்’ எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார்.

error: Content is protected !!