News March 27, 2024
பானை சின்னம் கேட்டு விசிக மனு

தனது கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்குமாறு விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுச் சின்னங்கள் ஒதுக்கப்படும். மற்ற கட்சி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சின்னத்தை கேட்டுப் பெற கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் பானை சின்னத்தை கேட்டிருக்கிறது விசிக.
Similar News
News December 24, 2025
₹3,100 கோடி வசூலை வாரிக்குவித்த அவதார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார்: 3’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், படத்தின் வசூலை விமர்சனங்கள் எந்தளவிலும் பாதிக்கவில்லை. கடந்த 19-ம் தேதி வெளியான இந்த படம், கடந்த 5 நாள்களில் உலகளவில் கிட்டத்தட்ட ₹3,135 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ₹82 கோடி வசூலித்துள்ளதாம். நீங்க படம் பாத்தாச்சா?
News December 24, 2025
இஷான் கிஷனின் மரண அடி.. 14 சிக்சர்களுடன் சதம்

தனது அதிரடி ஆட்டத்தால் சையத் முஸ்டாக் அலி கோப்பையை ஜார்க்கண்ட் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் இஷான் கிஷன். அதே பார்மில் இப்போது விஜய் ஹசாரேவிலும் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். கர்நாடகாவுக்கு எதிராக 33 பந்துகளில் சதம் அடித்து இஷான் வியக்க வைத்துள்ளார். 7 பவுண்டரிகள், 14 சிக்சர்கள் உட்பட 125 ரன்களை விளாசி ஜார்க்கண்ட் 412 ரன்களை குவிக்க அவர் உதவினார்.
News December 24, 2025
நகைக் கடன்.. முக்கிய அறிவிப்பு வெளியானது

2025-ல் மார்ச் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளில் நகைக் கடன் அளவு இருமடங்காக அதிகரித்து வருகிறது. தற்போது, தங்கத்தின் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், நகைக் கடன் வழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க RBI அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நகை கடன் மதிப்பு <<18646177>>வரம்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளன.<<>> இதனால், அதிகளவில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.


