News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 6, 2025
பட்டாசு கடைகளில் சட்டவிரோத செயல்கள்?

விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு கடைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் தற்போது வரை பூட்டியே கிடக்கின்றன. இதுபோன்ற பூட்டி கிடக்கும் பல பட்டாசு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே உரிய ஆய்வு நடத்த பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
News September 6, 2025
விருதுநகர்: ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலை

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. <
News September 6, 2025
விருதுநகர்: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<