News January 10, 2025
மா.செ.க்களை தனித்தனியாக சந்திக்கிறார் விஜய்

தவெகவின் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட உள்ள நபர்கள் இன்று இறுதி செய்யப்படுகின்றனர். தொடர்ந்து, ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் 100 மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பு, இறுதி செய்யப்படும் மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 15, 2025
பெரியாரை அவமானப்படுத்திய திமுக: நாஞ்சில் சம்பத்

திமுகவில் கூடும் இளைஞர்களின் கூட்டம் ₹1000-க்காக வந்தவர்கள் என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். தவெகவில் இருக்கும் இளைஞர்கள் விஜய்க்காக உயிரை தர தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உதயநிதியை இளம்பெரியார் என திமுகவினர் கூறியதன் மூலம், பெரியாரை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருக்கும் பாதிபேர் தவெகவுக்கு வந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
News December 15, 2025
கட்சியை தொடங்கியதும் மாற்றினார் ஓபிஎஸ்

‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ள OPS, கட்சியின் முகவரியையும் வழிச்சாலையில் இருந்து நந்தனத்துக்கு மாற்றிவிட்டார். இந்நிலையில், இன்று தமிழகம் வரும் அமித்ஷாவை சந்தித்து, NDA கூட்டணியில் இணைவதை உறுதி செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் அவரின் கட்சிக்கு கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
News December 15, 2025
T20I-ல் SKY-ன் மோசமான ரெக்கார்ட்!

T20I கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் மிகக் குறைந்த சராசரியில் (14.20) ரன்களை எடுத்த கேப்டன் என்ற மோசமான சாதனையை SKY படைத்துள்ளார். இந்த ஆண்டில் அவர் 18 இன்னிங்ஸில், வெறும் 213 ரன்களையே எடுத்துள்ளார். ருவாண்டா அணியின் கேப்டன் கிளிண்டன் ருபாகும்யா (12.52) எடுத்ததே குறைந்தபட்ச சராசரி என்றாலும், அந்த அணி ICC டாப்-20 அணிகளின் லிஸ்ட்டில் இல்லை என்பதால், SKY-யே மோசமான ரெக்கார்டுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.


