News April 22, 2025
டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
SPORTS 360°: ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

*மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
*ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. *இங்கிலாந்து – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இன்று பெர்த்தில் தொடங்குகிறது. *முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை அணியை 67 வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது.
News November 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 21, கார்த்திகை 5 ▶கிழமை:வெள்ளி ▶நல்ல நேரம்: 9.00 AM – 10.30 AM ▶ராகு காலம்: 10.30 AM – 12.00 PM ▶எமகண்டம்: 3.00 PM – 4.30 AM ▶குளிகை: 7.30 AM – 9.00 AM ▶திதி: அதிதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: அசுவினி ▶சிறப்பு : சந்திர தரிசனம். சுக்கிரன் வழிபாட்டு நாள் ▶வழிபாடு : மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து வழிபடுதல்.
News November 21, 2025
இந்தியர்களின் சிந்தனை புனிதமானது: RN ரவி

சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷரின் தலையீட்டால், நம் நாட்டின் கலை மற்றும் கலாசாரம் சார்ந்த கூறுகள் மறைக்கப்பட்டதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேற்கத்திய கலாசாரத்தை தவிர்த்து, நம்முடைய பாரம்பரிய கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும், ஐரோப்பியர்களை விட இந்தியர்களின் சிந்தனை புனிதம் வாய்ந்தது எனவும் கூறியுள்ளார். நமது கலாசாரம், பண்பாடு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அவர் தெரிவித்தார்.


