News October 24, 2024

உச்சத்தில் சுக்கிரன்: பணம் கொட்டப்போகும் 3 ராசிகள்!

image

சுக்கிர பகவான் அனுஷ நட்சத்திரத்திற்கு அக்.16-இல் இடம்பெயர்ந்தார். இந்த பயணம் 3 ராசிக்காரர்களுக்கு செல்வத்தை வாரி வழங்க போகிறது. 1) சிம்மம்: திடீர் இடமாற்றத்தால் பண வரவு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை தரும். 2) கன்னி: தொட்டதெல்லாம் வெற்றியாகும். வியாபாரம் செழிக்கும். 3) தனுசு: நீண்டகாலமாக வராமல் இருந்த பணம், வட்டியோடு வரும். எந்த காரியத்தை செய்தாலும் லாபம் வரும். பேச்சில் கவனம்.

Similar News

News November 14, 2025

சினிமாவில் சாதி வேண்டாம்: அண்ணாமலை

image

திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்ற விஷயங்களை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் அனைவருக்கும் பொருப்பு இருப்பதாகவும், கோவை மாணவி விவகாரத்தில் போலீஸார் தங்கள் வேலையில் கோட்டை விட்டதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், CM ஸ்டாலின் காவல்துறையை இன்னும் சிறப்பாக கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 14, 2025

19-ம் தேதி தமிழகம் வரும் PM மோடி

image

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், வரும் 19-ம் தேதி கோவையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள PM மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இந்த மாநாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களை PM மோடி சந்தித்து பேச உள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், PM மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News November 14, 2025

International Roundup: டிரம்ப்புக்கு இழப்பீடு வழங்க BBC மறுப்பு

image

*டிரம்ப்பின் பேச்சை திரித்து பரப்பியதற்காக BBC மன்னிப்பு கோரியது, ஆனால் இழப்பீடு வழங்க மறுத்துள்ளது. *செவ்வாய் கோளை ஆராய நாசாவும், அமேசானின் புளு ஒரிஜினும் இணைந்து விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. *இஸ்ரேல் தாக்குதலில் 2 குழந்தைகள் பலி. *15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Verizon நிறுவனம் முடிவு. *சூடானின் கிழக்கு பகுதியில் முற்றுகையிட தொடங்கியது அந்நாட்டின் துணை ராணுவப்படை.

error: Content is protected !!