News April 2, 2025
காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ₹12க்கு விற்கப்பட்ட ஒரு தக்காளி தற்போது ₹24க்கும், வெங்காயம் ₹5 உயர்ந்து ₹25க்கும், உதகை கேரட் ₹15 உயர்ந்து ₹50க்கும், பீன்ஸ் ₹20 உயர்ந்து ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட மறுநாளே விலையும் அதிகரித்துள்ளது.
Similar News
News April 11, 2026
170 வேட்பாளர்களை அறிவித்தார் வேல்முருகன்

தவாக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் பட்டியலை வேல்முருகன் வெளியிட்டுள்ளார். 2 கட்டங்களாக வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 170 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார் தொகுதிகளான கொளத்தூரில் ஊர்மிளா, எடப்பாடியில் கோவிந்தராஜ், திருச்சி கிழக்கில் ராயல் ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இக்கூட்டணிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
News April 11, 2026
விஜய்க்கு ஆதரவாக நானா? பார்த்திபன் மறுப்பு

விஜய் தான் அடுத்த CM என பார்த்திபன் கூறியதாக செய்தி பரவியது. இந்நிலையில், இதுபோன்ற கருத்தை தான் தெரிவிக்கவில்லை என அவர் மறுத்துள்ளார். மேலும், இந்த செய்தியை வெளியிட்ட நபரிடம், தான் பேசியதற்கான proof உங்களிடம் உள்ளதா என கேட்டேன். அந்த நபரிடம் proof இல்லததால், போஸ்ட்டை உடனே remove செய்துவிட்டார் எனக்கூறிய பார்த்திபன், இதுபோன்ற செய்தியை வெளியிடுவதற்கு முன் யோசித்து செயல்படவும் வலியுறுத்தினார்.
News April 11, 2026
விஜய் பரப்புரையில் விபத்துகள்: ஸ்டாலின் பதில்

புதிதாக எத்தனை பேர் வந்தாலும் திமுகவே வெல்லும் என ஸ்டாலின் கூறியுள்ளார். விஜய்யின் பரப்புரையின்போது ஏற்படும் விபத்துகள் குறித்து கேட்டதற்கு, நாட்டு மக்கள் அனைவரும் இதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்; விரைவில் அவர்கள் திருந்துவார்கள் என்றார். மேலும், தற்போதைய சூழலில் 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றிபெறும் என்ற நிலை உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.


