News April 2, 2025
காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ₹12க்கு விற்கப்பட்ட ஒரு தக்காளி தற்போது ₹24க்கும், வெங்காயம் ₹5 உயர்ந்து ₹25க்கும், உதகை கேரட் ₹15 உயர்ந்து ₹50க்கும், பீன்ஸ் ₹20 உயர்ந்து ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட மறுநாளே விலையும் அதிகரித்துள்ளது.
Similar News
News January 14, 2026
மகளிருக்கு ₹5,000 மானியம்.. அரசு அறிவிப்பு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் தொழில் தொடங்க அரசு மானியம் அறிவித்துள்ளது. இதற்கு, பிறப்புச் சான்று, BLP கார்டு(வறுமைக் கோட்டு அட்டை), வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களுடன், தகுதியுடைய பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ₹10,000-க்கு மேல் உள்ள கிரைண்டர் வாங்க 50% அல்லது ₹5,000 மானியமாக வழங்கப்படுகிறது.
News January 14, 2026
வாத்தியாரிடம் ஆசிர்வாதம் பெற்ற வாத்தியார் (PHOTOS)

நீண்ட தள்ளிவைப்பிற்கு பின், அடுத்தடுத்து உண்டான சிக்கல்களை சமாளித்து கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தில் எம்ஜிஆரின் மறு உருவமாக நடித்துள்ள கார்த்தி, சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதியில் மலர்தூவி ஆசிர்வாதம் பெற்றார். அப்போது, அவருடன் நடிகர்கள் சத்யராஜ், ஆனந்தராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் உடனிருந்தனர். எத்தனை பேர் ‘வா வாத்தியார்’ பார்க்க வெயிட்டிங்?
News January 14, 2026
2வது ODI-ல் ஜுரெல் or நிதிஷ்.. யார் விளையாடுவாங்க?

NZ-க்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி அதிகளவில் எழுந்துள்ளது. ஜுரெல் & நிதிஷ் குமார் ரெட்டி இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கப்படலாம். பயிற்சியாளர் கம்பீர் ஆல்ரவுண்டர்களையே அதிகம் விரும்புவதால், நிதிஷ் குமார் ரெட்டிக்கே சான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க இந்தியாவின் பெஸ்ட் பிளேயிங் XI-ஐ சொல்லுங்க?


