News January 23, 2025
காய்கறிகள் விலை கணிசமாக குறைந்தது

பொங்கலையொட்டி அதிகரித்திருந்த காய்கறிகளின் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. திண்டுக்கல் சந்தையில் 1 கிலோ கத்திரிக்காய் ரூ.80க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.70 குறைந்து ரூ.10க்கு விற்கப்படுகிறது. உருளை, அவரைக்காய் 1 கிலோ ரூ.30ஆக குறைந்துள்ளது. முள்ளங்கி ரூ.10ஆக சரிந்துள்ளது. தக்காளி விலையும் கிலோ ரூ.10ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. உங்கள் ஊரில் காய்கறிகள் விலை குறைந்துள்ளதா?
Similar News
News July 7, 2025
சிறிய வயதிலேயே கர்ப்பமானேன்: ஷகிலா

பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஷகிலா அளித்த பழைய பேட்டி வைரலாகிறது. அதில் தான் சின்ன பெண்ணாக இருக்கும் போது, ஆண் நண்பர் ஒருவரால் கர்ப்பம் ஆனேன் என்றும், தனது வயதை கணக்கில் கொண்டு தனக்கு கருகலைப்பு செய்துவிட்டார்கள் என தெரிவித்தார். அந்த நேரத்தில் என் அம்மா செய்தது சரியான முடிவு என நினைக்கிறேன் என்றார். சம்மந்தப்பட்ட நபருடன் தற்போதும் தான் பேசிவருவதாகவும் கூறினார்.
News July 7, 2025
திருமாறன் கூறுவது அப்பட்டமான பொய்: நிகிதா

உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் தெரிவித்த நிகிதா, தன்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிவிட்டார் என்றும், 3க்கும் மேற்பட்ட திருமணங்களை அவர் செய்திருப்பதாகவும் திருமாறன் என்பவர் புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிகிதா, திருமாறன் உடனான உறவு எப்போதோ முடிந்துவிட்டது என்றும், ₹10 லட்சம் வாங்கிக்கொண்டு நான் விவாகரத்து கொடுத்தேன் என அவர் கூறுவது அப்பட்டமான பொய் என்றார்.
News July 7, 2025
எம்.எஸ்.தோனி பொன்மொழிகள்

*”தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டாம், அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுங்கள்”, *”கடின உழைப்பைச் செலுத்தி முடிவுகளைப் பெறுவது முக்கியம்”. *”எல்லாமே உங்கள் வழியில் செல்லும் நல்ல நேரங்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கடினமான காலகட்டத்தை கடக்கும்போது நிறைய கற்றுக்கொள்கிறீர்கள்”*”வெற்றி என்பது இலக்கு அல்ல, அது ஒரு பயணம்.” * “நீங்கள் கூட்டத்திற்காக விளையாடுவதில்லை, நாட்டிற்காக விளையாடுகிறீர்கள்.”