News January 23, 2025
காய்கறிகள் விலை கணிசமாக குறைந்தது

பொங்கலையொட்டி அதிகரித்திருந்த காய்கறிகளின் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. திண்டுக்கல் சந்தையில் 1 கிலோ கத்திரிக்காய் ரூ.80க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.70 குறைந்து ரூ.10க்கு விற்கப்படுகிறது. உருளை, அவரைக்காய் 1 கிலோ ரூ.30ஆக குறைந்துள்ளது. முள்ளங்கி ரூ.10ஆக சரிந்துள்ளது. தக்காளி விலையும் கிலோ ரூ.10ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. உங்கள் ஊரில் காய்கறிகள் விலை குறைந்துள்ளதா?
Similar News
News November 21, 2025
நாளை உருவாகிறது புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 25-ம் தேதி வரை டெல்டா, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(நவ.21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழையா?
News November 21, 2025
FLASH: பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

இன்று அதிகாலை பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 135 கி.மீ., ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் சந்திக்கும் உலகின் மிகவும் நில அதிர்வுள்ள மண்டலங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சில பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
News November 21, 2025
பிஹார் பாணியில் TN-ல் கூட்டணி ஆட்சி: கிருஷ்ணசாமி

தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் பிஹாரை பார்த்து பாடம் கற்க வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியும், பூரண மதுவிலக்கும் தான் 2026 தேர்தலில் முக்கியமானதாக இருக்கும்; ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டினால் தான் விடிவு காலம் பிறக்கும்; கூட்டணி ஆட்சி, மதுவிலக்கு என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சியுடன் தான் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


