News March 29, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும். *மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான். *அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன.
Similar News
News February 11, 2026
மூளை நோய்களை துல்லியமாக கண்டறியும் AI

மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கிய பிரைமா என்ற AI, மூளை நோய்களை மிக துல்லியமாக கண்டறிந்துள்ளது. இது மூளை MRI ஸ்கேன்களை விநாடிகளில் ஆய்வு செய்து 97.5% துல்லியமான முடிவுகளை தந்துள்ளது. சுமார் 2.2 லட்சம் ஸ்கேன்களை கொண்டு பயிற்சி பெற்ற பிரைமா, 50-க்கும் மேற்பட்ட மூளைப் பாதிப்புகளை கண்டறியும் திறன் கொண்டது. நரம்பியல் நிபுணர்கள் இல்லாத பகுதிகளில் இது பயனுள்ளதாக இருக்கும்.
News February 11, 2026
தமிழ்மொழித் தேர்வை கட்டாயமாக்குக: சீமான்

பிறமொழி பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுத TN அரசு விலக்கு அளித்துள்ளதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்மொழித் தேர்வை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டு 10 ஆண்டுகளாகியும், அதனை நடைமுறைப்படுத்தாதது அன்னை தமிழுக்கு செய்யும் பெருந்துரோகம் என்றும், நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்மொழித் தேர்வை கட்டாயமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News February 11, 2026
சிவ ராத்திரி, வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

மகா சிவராத்திரி, வார விடுமுறையையொட்டி, மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்களை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாளை(பிப்.12) முதல் 3 நாள்களுக்கு சுமார் 750 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். tnstc இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் டிக்கெட்டை புக் செய்யுங்கள்.


