News October 1, 2025
முற்றிலுமாக முடங்கிய அமெரிக்க அரசு

செலவினங்கள் தொடர்பான மசோதா செனட் சபையில் நிறைவேறாததால், அமெரிக்கா முடங்கியுள்ளது. மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவைப்படும் நிலையில் டிரம்பின் அரசுக்கு 55 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து பெடரல் ஊழியர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா ஷட் டவுன் ஆவது இதுவே முதல்முறையாகும்.
Similar News
News October 1, 2025
40 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை❤️❤️

நடிகர் அனில் கபூரின் மகளான பிரபல நடிகை சோனம் கபூர்(40) மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை 2018-ம் ஆண்டு மணந்த அவருக்கு, 2022-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில், அவர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் நடித்து இந்தி மொழியில் ஹிட்டான ‘ராஞ்சனா’ படத்தில் சோனம் கபூர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 1, 2025
வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் ஆன்மா: PM மோடி

இன்று நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் முன்பை விட வேறுபட்டவை என PM மோடி தெரிவித்துள்ளார். RSS நூற்றாண்டு விழாவில் பேசிய அவர் சாதி, மொழி, பிராந்தியவாத சிந்தனைகளால் ஏற்படும் பிளவுகள் தவிர்க்கப்படாவிட்டால் நாட்டை பலவீனப்படுத்தும் எனக் கூறியுள்ளார். மேலும், மக்கள் தொகை மாற்றம், சமூக சமத்துவத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாகவும், வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் ஆன்மாவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
அமெரிக்காவில் ஷட் டவுன் என்றால் என்ன?

அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வேண்டும். ஆளுங்கட்சிக்கு செனட்டில் மெஜாரிட்டி இல்லையெனில், எதிர்க்கட்சியுடன் பேசி ஒப்புதலை பெறுவார்கள். அப்படி ஒப்புதல் கிடைக்காவிட்டால், அமெரிக்க அரசின் நிர்வாக செலவுகளுக்கு (ஊழியர்களுக்கான சம்பளம் உள்பட) நிதி கிடைக்காமல் பணிகள் முற்றிலுமாக <<17883569>>ஷட் டவுன்<<>> ஆகும். இதுபோன்ற நெருக்கடியே இப்போது அமெரிக்காவில் நிலவுகிறது.