News October 1, 2025
முற்றிலுமாக முடங்கிய அமெரிக்க அரசு

செலவினங்கள் தொடர்பான மசோதா செனட் சபையில் நிறைவேறாததால், அமெரிக்கா முடங்கியுள்ளது. மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவைப்படும் நிலையில் டிரம்பின் அரசுக்கு 55 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து பெடரல் ஊழியர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா ஷட் டவுன் ஆவது இதுவே முதல்முறையாகும்.
Similar News
News December 11, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.33 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 11, 2025
தி.குன்றம் விவகாரம்: முதல் முறையாக தவெக கருத்து

திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி முதல்முறையாக தவெக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் TN அரசு தவறான வாதங்களை முன்வைத்ததாக CTR நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். அங்கு அரசு தான் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது என்ற அவர், பாரம்பரியமாக பின்பற்ற வேண்டிய முறைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றார். இவரது கருத்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 11, 2025
தமிழகம் 100/100.. SIR படிவங்கள் பதிவேற்றம்

SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை டிச.14-ம் தேதி வரை EC நீட்டித்துள்ளது. இந்நிலையில், TN-ல் 100% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC அறிவித்துள்ளது. மொத்தம் 6.41 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவம் கொடுக்கப்பட்டதாகவும், பெரும்பாலானோர் படிவத்தை சமர்ப்பித்ததை தொடர்ந்து, விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC கூறியுள்ளது. இதையடுத்து டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.


