News April 15, 2025
அடிக்கடி செயலிழக்கும் UPI: தீர்வு என்ன?

கடந்த 18 நாள்களில் மட்டும் 4 முறை UPI பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஒரு நிமிடம் செயலிழந்தாலும், 4 லட்சம் பேர் பாதிப்பார்கள். நாடு முழுவதும் 40 கோடி பேர் UPI பரிவர்த்தனையை நம்பியிருக்கும் சூழலில், அடிக்கடி செயலிழந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்புகின்றனர் நிதி நிறுவன நிர்வாகிகள். இதற்கு தீர்வு காண மத்திய அரசின் NPCI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News November 8, 2025
Diabetes இருந்தால் இனி USA-க்கு விசா கிடையாது!

அமெரிக்காவில் ஏற்கெனவே விசா கிடைப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், கிரீன் கார்டு பெற அல்லது விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, Diabetes, இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் இருந்தால், அவர்களுக்கு விசா மறுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயுள்ளவர்களால் அமெரிக்க அரசுக்கு நிதிச்சுமை கூடும் எனக்கருதி, டிரம்பின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News November 8, 2025
கருணாநிதி நினைவிடத்தில் தீவிர சோதனை

சென்னை மெரினாவில் உள்ள Ex CM கருணாநிதி நினைவிடத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நினைவிடத்திற்கு செல்வோரின் பெயர், மொபைல் எண்ணை பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதனால், கருணாநிதி நினைவிடத்தில் மனு அளித்து தூய்மை பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவல் வெளியான நிலையில், தீவிரமாக சோதனை நடக்கிறது.
News November 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹240 உயர்வு

தங்கம் விலை இன்று(நவ.8) சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹165-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. <<18232021>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை உயர்ந்ததன் எதிரொலியாக நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது.


