News January 2, 2025
இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
உலகின் மிக நீளமான ஹைவே இதுதான்!

உலகிலேயே மிக நீளமான சாலை, ‘பான்-அமெரிக்கன்’ ஹைவே என்பது உங்களுக்கு தெரியுமா? இது அலாஸ்காவின் ப்ரூடோ பே(Prudhoe Bay)வில் தொடங்கி, எந்த யூ-டர்னும் இல்லாமல், 14 நாடுகள் வழியாக அர்ஜென்டினா வரை செல்கிறது. 30,000 கிமீ நீளமுள்ள இந்த ஹைவே, மழைக்காடுகள், பாலைவனங்களை தாண்டி செல்கிறது. இந்த சாலையில் முழுமையாக பயணம் செய்துமுடிக்க சுமார் 60 நாள்கள் பிடிக்குமாம்.
News December 10, 2025
விஜய் உடன் கூட்டணி.. அமைச்சர் அறிவித்தார்

புதுச்சேரியில் பரப்புரை செய்த விஜய், அங்கு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பற்றி ஏதும் பேசாமல், அவர்களுடன் கூட்டணியில் உள்ள பாஜகவை மட்டுமே விமர்சித்திருந்தார். இதனால் தவெக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி CM ரங்கசாமிக்கு தான் தெரியும் என்று புதுச்சேரி அமைச்சர் லஷ்மி நாராயணன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
மீண்டும் ரத்து செய்யப்படும் இண்டிகோ விமானங்கள்

இன்று, நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து மட்டும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளது. கடுமையான நெருக்கடிக்குப் பிறகு, தங்களது விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக நேற்று, இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் அறிவித்திருந்தார். இந்த சூழலில், விமான சேவைகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


