News March 21, 2024
இன்றே கடைசி நாள்: மத்திய அரசில் 1,125 பணியிடங்கள்

மத்திய அரசின் பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 1,125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். Center In Charge, Assistant & Extension Officer பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, +2, Any Degree. வயது வரம்பு: 18-40. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹37,500-₹43,500/-. கூடுதல் தகவல்களுக்கு <
Similar News
News April 28, 2025
PM மோடி சொன்ன ஆப்… உங்ககிட்ட இருக்கா..?

‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் PM மோடி குறிப்பிட்ட SACHET செயலியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? இந்திய வானிலை ஆய்வு துறையின் அதிகாரப்பூர்வ ஆப்பான இதில், தங்கள் பகுதியின் real-time வானிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், பேரழிவு காலங்களில் இந்த செயலியின் மூலம் உதவி எண்கள், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் போன்ற தகவல்களையும் அறியலாம். இது 12 மொழிகளிலும் சேவை வழங்குகிறது. உங்ககிட்ட இருக்கா?
News April 28, 2025
திமுக ஆட்சி குறித்து பேச அதிமுகவிற்கு தகுதியில்லை: CM

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என பேசிய இபிஎஸ்-க்கு CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி என்று விமர்சித்த அவர், சட்டம் ஒழுங்கு குறித்து பேசவும், திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டவும் அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்தாக விமர்சித்தார்.
News April 28, 2025
NCERT பாடநூலில் கும்பமேளா IN முகலாய வரலாறு OUT..!

மத்திய அரசின் கீழுள்ள NCERT பாடநூலில் செய்யப்பட்ட மாற்றம் சர்ச்சையாகியுள்ளது. 7-ம் வகுப்பு பாடநூலில் மகாகும்பமேளா உள்ளிட்ட புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், முகலாய மன்னர், டெல்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.