News March 21, 2024

இன்றே கடைசி நாள்: மத்திய அரசில் 1,125 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 1,125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். Center In Charge, Assistant & Extension Officer பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, +2, Any Degree. வயது வரம்பு: 18-40. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹37,500-₹43,500/-. கூடுதல் தகவல்களுக்கு <>BPNL<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

Similar News

News March 11, 2026

சேலம்: எம்எல்ஏ அருள் அதிரடி எச்சரிக்கை!

image

சேலம் ஓமலூர் கோட்டக்கவுண்டம்பட்டியில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக் கோரி பாமக எம்.எல்.ஏ அருள் வலியுறுத்தியுள்ளார். வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் கடை மூடப்படாவிட்டால், அன்றைய தினம் காலை 11 மணிக்குத் தாமே நேரில் வந்து கடையைப் பூட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News March 11, 2026

CSK-வில் ரெய்னா? அணியின் CEO அப்டேட்

image

ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், CSK-வின் பேட்டிங் அல்லது பீல்டிங் பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என தகவல் கசிந்தது. ஆனால், இது ஒரு வதந்தி என மறுத்துள்ள அணியின் CEO காசி விஸ்வநாதன், பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவில்லை என கூறியுள்ளார். CSK-வில் இணைய ரெய்னா விருப்பம் தெரிவித்தும், அவரை அணி நிர்வாகம் சேர்க்காததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

News March 11, 2026

இனி மொபைல் டேட்டாவிற்கும் வரி!

image

மத்திய அரசு மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது குறித்த ஆய்வு செய்யுமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாம். 1 GB டேட்டாவிற்கு ₹1 வரி விதித்தால் கூட, ஆண்டுக்கு சுமார் ₹22,900 கோடி வருவாய் கிடைக்கும். வரி வருவாயுடன் சேர்த்து, அதிகப்படியான ஸ்க்ரீன் டைமை குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாம். ஆலோசனை நிலையில் உள்ள இத்திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

error: Content is protected !!