News September 14, 2024
இன்றைய நல்ல நேரம்

▶செப்.14 (ஆவணி 29) ▶சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 7.45 -8.45 AM & 04.45 – 05.45PM ▶கெளரி நேரம்: 10:45 – 11:45AM & 09:30 – 10:30PM ▶இராகு காலம்: 09:00 – 10:30AM ▶எமகண்டம்: 01:30 – 03:00PM ▶ குளிகை: 06:00 – 07:30 AM ▶திதி: ஏகாதசி மாலை 5:05 வரை ▶ நட்சத்திரம் 05:57 PM வரை உத்திராடம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶அமிர்தாதி யோகம்: சித்தயோகம் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி, மி.சீருடம்
Similar News
News February 7, 2026
செங்கை: 5 பேர் அதிரடி கைது!

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விமான பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 23 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சாக்களை பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் பதுக்கி வைத்து கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட கஞ்சாக்களின் மதிப்பு 23 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
பாஜகவின் முரட்டு அடிமை EPS: உதயநிதி

முரட்டு பக்தர்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கிறீர்களா என DCM உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடைய முரட்டு அடிமையாக தற்போது EPS திகழ்வதாக கூறிய அவர், அதனால்தான் மத்திய பட்ஜெட்டை அவர் வரவேற்றிருக்கிறார் எனவும் கூறியுள்ளார். மேலும், இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் நிச்சயம் வரும் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் எனவும் பேசியுள்ளார்.
News February 7, 2026
PM மோடி மலேசியா விசிட்.. காத்திருக்கும் புதிய சாதனை!

2 நாள்கள் அரசுமுறை பயணமாக PM மோடி இன்று(பிப்.7) மலேசியா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளிடையே செமிகண்டக்டர், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, PM மோடி வருகையின்போது கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றாக 5 நிமிடங்கள் நடனமாடி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளனர்.


