News April 10, 2025
வரலாற்றில் இன்று

➤1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார். ➤1912 – டைட்டானிக் கப்பல் தனது கடைசி பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. ➤1985 – யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது. ➤ 2006 – மீரட் நகரில் வணிகக் கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். ➤ 2016 – கொல்லம் கோயில் விழா தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி.
Similar News
News July 11, 2025
லோகேஷ் மீது கோபம்: சஞ்சய் தத்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக உள்ளதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். ‘கேடி: தி டெவில்’ பட விழாவில் ஜாலியாக பேசிய அவர் லியோ படத்தில் தனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை எனவும் தன் திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
News July 11, 2025
மும்பை ரயில் குண்டுவெடிப்பு 19-ம் ஆண்டு நினைவு தினம்

மும்பை புறநகர் ரயில்களில் 2006 ஜூலை 11-ம் தேதி மாலை நேரத்தில் தீவிரவாதிகள் 7 தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் 180-க்கும் மேற்பட்ட அப்பாவி பயணிகள் பலியானதுடன், 800 பேர் பலத்த காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டுவெடிப்புகளில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
News July 11, 2025
6 வயது குழந்தைக்கு 45 வயது நபருடன் திருமணம்!

ஆப்கனில் கொடுத்த கடனை கட்ட முடியாத தந்தை ஒருவர், பொம்மையுடன் விளையாட வேண்டிய தனது 6 வயது குழந்தைக்கு 45 வயது நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தை நிறுத்தாமல், ‘9 வயசு வரை குழந்தையை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகாதீங்க’ என தலிபான் அரசின் தீர்ப்பளித்திருப்பது மேலும் அதிரவைக்கிறது. கண் துடைப்பாக, குழந்தையின் தந்தை & திருமணம் செய்தவரை கைது செய்துள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?