News April 10, 2025
வரலாற்றில் இன்று

➤1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார். ➤1912 – டைட்டானிக் கப்பல் தனது கடைசி பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. ➤1985 – யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது. ➤ 2006 – மீரட் நகரில் வணிகக் கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். ➤ 2016 – கொல்லம் கோயில் விழா தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி.
Similar News
News December 9, 2025
கரூர் துயரத்தில் இருந்து பாடம் கற்ற விஜய்

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, முதல்முறையாக விஜய்யின் மக்கள் சந்திப்பு புதுவையில் நடந்து வருகிறது. திருச்சி, அரியலூர், நாகை, நாமக்கலில் நடந்த மக்கள் சந்திப்பின்போது, ரோடு ஷோ நடத்தினார். ஆனால், புதுவையில் அதுபோன்ற நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. சென்னையில் இருந்து புதுச்சேரி உப்பளம் வரை ஆரவாரமும் இன்றி காரிலேயே பயணித்த விஜய், பிரசார வாகனத்தில் பேரணியாக செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டார்.
News December 9, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இருந்து விலகினர்

ஒருபுறம் விஜய்யின் பரப்புரை வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், மறுபுறம் செங்கோட்டையன் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், அதிமுக சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். மேலும், KAS கை காட்டும் நபருக்குத்தான் எங்கள் ஓட்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
News December 9, 2025
இண்டிகோ பிரச்னை எப்போது தீரும்? அமைச்சர் விளக்கம்

இண்டிகோ பிரச்னை சீராகி வருவதாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், விமானங்களின் ரத்து, தாமதம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், விரைவில் நிலைமை முழுவதும் சீராகும் என்றும் குறிப்பிட்டார். விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், ரீபண்ட், பேகேஜ்களை வழங்குவது, பயணிகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.


